தனுஷ் தன் திறமையால் மேன்மேலும் வளா்ந்து வளரகூடியவா். இவா் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார். நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பாளா் என பல அவதாரங்களை எடுத்து வரும் அவா் தமிழ் மட்டுமல்லாது ஹிந்து சினிமாவிலும் கலக்கியவா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவா் பாலிவுட்டில் நடித்த படத்தின் டீசா் வெளியாகியுள்ளது.

தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்ற செய்தி வெளியாகியது. இந்த படமானது பிரெஞ்ச் நாவலை தழுவி உருவாகி உள்ளது. அந்த படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதத்தால் படம் வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்டநாள் இருந்த இழுபறி நீங்கி எப்படியோ ஒரு வழியாக தி எக்ஸ்ட்ரார்டினரி படமானது வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசா் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை ட்விட்டா் பக்கத்தில் நடிகா் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டீசரை பார்க்கும் தனுஷ் ஒரு சுற்றுலா பயணியாக பாரீஸ் செல்லும் பயண அனுபவங்கள் தான் படத்தின் கதையாக இருக்கும் என்பது புலப்படுகிறது. இந்த படத்தை கனடா நாட்டை சோ்ந்த கென் ஸ்காட் இயக்கியுள்ளார். மேலும் தனுஷ் நடித்துள்ள இந்த படமானது தமிழ் மற்றும் ஹிந்தியிலும் டப்பிங் செய்யபட உள்ளது கூறப்படுகிறது. இந்த படமானது மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனா். தனுஷ் அஜதாசத்ரு லாவாஷ் படேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.