முடிவுக்கு வந்தது தனுஷின் ஹாலிவுட் படம்

12:37 மணி

தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான ‘The Extraordinary Journey of the Fakir’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கிய நிலையில் இந்த படம் இரண்டே மாதத்திற்குள் முடிவுக்கு வந்துவிட்டது.

Loading...

பொதுவாக ஹாலிவுட் படம் என்றால் குறைந்தது ஒரு வருட படப்பிடிப்பு இருக்கும். ஆனால் தனுஷ் உள்பட இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட காலத்திற்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

பிரபல ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கும் இந்த படத்தில் தனுஷ், Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் ‘பண்டிட் குவீன்’ படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393