‘காலா’ படத்தில் நடிப்பது உண்மையா? தனுஷ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தின் அடுத்த படப்பிடிப்பு சென்னையில் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தில் சிறுவயது ரஜினியாக தனுஷ் நடிப்பது குறித்து வெளிவந்த தகவல்களுக்கு தனுஷ் விளக்கமளித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘அப்படி ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருப்பதை நானும் பார்த்தேன். ஆனால் அப்படி ஒரு கேரக்டர் அந்த படத்தில் இருக்கின்றதா? என்பது எனக்கே உண்மையாக தெரியாது. அப்படி ஒரு கேர்கடர் இருந்து அதில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது எனக்கு மகிழ்ச்சியான செய்திதான் என்று கூறினார்.

சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் இருக்கும் ஆசை எனக்கும் உள்ளது. அது நிறைவேறுவது கடவுளின் கையில் தான் இருக்கின்றது என்று தனுஷ் மேலும் கூறினார்.