அஜித்தை தனுஷ் முந்தியதற்கு இதுதான் காரணம்

கோலிவுட் திரையுலகில் பன்முக திறமைசாலியாக இருந்து வரும் தனுஷ் நடித்த ‘விஐபி 2’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் முதல்வாரம் வெளியாகும் என்றுகூறப்பட்டது.

ஆனாலும் சென்சார் சர்டிபிகேட் வந்தபின்னரே அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்று ‘யூ’ சான்றிதழும் பெற்றுவிட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் அஜித் படத்தின் ரிலீசுக்கு முந்தி, அதாவது ஆகஸ்ட் 4ஆம் தேதியே இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது