அஜித் இடத்தை பிடித்தார் தனுஷ்

அஜித் நடித்த ‘விவேகம்’ படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் என்று கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நேற்று இந்த படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ‘விஐபி 2’ படம், அஜித் விட்ட அந்த ஆகஸ்ட் 11ல் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் டுவிட்டர் பக்கத்தில் சரியாக இன்று இரவு ஏழு மணிக்கு வெளியான டீசரில் ‘விஐபி 2’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதே தேதியில் மேலும் எட்டு படங்கள் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தனுஷ் பட அறிவிப்பால் ஒருசில படங்கள் பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.