dhanush

நடிகர் தனுசுக்கு மாரி 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி கேள்விபட்டவுடன் ரஜினி குடும்பத்தினர் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாகி வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  ஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்புவார்: விசாரணையில் கிடுக்கிப்பிடி கேள்வி!

maari 2

இந்த படத்தில் வரலட்சுமி கலெக்டராக நடிக்கிறார். அதுபோல சாய் பல்லவிக்கு வித்தியாசமான கேரக்டர். ஆட்டோ ஒட்டுபவராக நடிக்கிறார் சாய்பல்லவி. வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மாரி 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நெல்லை மாவட்ட பகுதியில் நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வில்லன் டோவினோ தாமஸ், தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது. உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  புதிய லோகோவுடன் எனை நோக்கி பாயும் தோட்டா

தனுசுக்கு ஏற்பட்ட காயம் குறித்த செய்தியை அறிந்த ரஜினி குடும்பத்தினர் தனுஷை நேரில் பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர். தற்போது அவருக்கு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. ஒரிரு நாட்களில் காயம் முழுவதும் குணமடைந்த பின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. தற்போது ரஜினி டேராடூனில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் நேரில் வந்து ஆறுதல் சொல்ல இயலவில்லை. தனுசின் உடல்நலம் பற்றி போனில் விசாரித்தாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டு: சுசித்ரா சர்ச்சை பதிவு