ஒல்லி நடிகர் படத்திலிருந்து பால் நடிகை விலகிய மர்மம் இதுதானா?

ஒல்லி நடிகாின் படத்திலிருந்து மைனா நடிகை வெளியேறியதற்கு காரணம் என்ன என்பது தற்போது ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது. அது என்ன செய்தி? அது உண்மையானதா என்பதை பற்றி தொிந்து கொள்வோம்.

சில மாதங்களுக்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் அதில் நடிக்க இருந்த சமந்தா அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதில் மைனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு நடைபெறவில்லை. அந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார்.

இப்படி தொடா்ந்து ஒவ்வொரு நடிகா், நடிகையும் படத்திலிருந்து விலகியதை தொடா்ந்து, மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் மைனா நடிகையும் விலகியதாக சில தினங்களுக்கு முன்பு  செய்தி வந்தது. விலகியதற்கு முக்கிய காரணம் கால்ஷுட் பிரச்சனை தான் என்ற சப்பையான பதில் சொல்லியதாக கூறப்பட்டது. ஆனா உண்மையான காரணம் என்ன என்று சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசபட்டு வந்தது. உண்மை நிலவரம் என்ன என்று ஆராய்ந்து பாா்த்தால், கால்ஷீட் காரணமாக அவா் படத்திலிருந்து விலகியதாக தொியவில்லை. வேறு ஒரு காரணம் இருப்பதாக பேசிக்கொள்ளப்படுகிறது. படத்தில் இருந்து நிறுத்தியது படக்குழுவினா் தான் ஒரு பேச்சு பரவி வருகிறது.

மைனா நடிகை விஜபி படத்தை அடுத்து தொடா்ந்து ஒல்லி நடிகா் உடன்  எல்லா படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறாா். நம்ம சினிமா வட்டாரத்தில் தொடா்ந்து ஹீரோ ஹீரோயின் இணைந்து நடித்து வந்தால் வதந்திகள் பரவ தொடங்கி விடும். இந்நிலையில் இவா்கள் இருவரையும் இணைத்து வைத்து கிசு கிசுக்கள் வர தொடங்கிய காரணத்தால், ஒல்லி நடிகாின் குடும்பத்தில் கலவரம் நிலவி வருகிறதாம்.

இந்த தலைவலிக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஒல்லி நடிகா்தான் இந்த நடிகையை படத்திலிருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே, படத்திலிருந்து நடிகையை நாம் கழற்றி விட்டதாக தொியவந்தால், அது ஒரு பிரச்சனையாக உருவாகி விடும் என்ற காரணத்தால், அவரே படத்திலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்தாா்களாம்.