மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி. ரசிகர்கள் மலர் டீச்சர் என்று தலையில் வைத்து கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது இவரது நடிப்பு. தற்போது இவர் மாரி 2வில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.

சாய் பல்லவி மலையாளத்தை அடுத்து தெலுங்கில் தன் முத்திரையை பதிக்க தொடங்கினார். அதன்பின் முதலில் சாய்பல்லவி தமிழில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் பெயர் தியா என மாற்றப்பட்டது. இந்த படத்தில் சாய்பல்லவி ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் சாய்பல்லவின் கேரக்டர் என்ன வென்று வெளிவராமல் இருந்தது.

தற்போது அவரது கேரக்டர் என்னவென்றால், ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். தனுஷ் நடித்து பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுதது வருகிறார்கள். இந்த படத்தில் சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம். ஆட்டோ ஓட்ட அவர் சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். மேலும் வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

சாய்பல்லவி சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் நடிக்கிறார். மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடிக்கிறாராம்.