வட மாநிலத்தில் கொண்டாடப்படும் தனுஷ்!

தனுஷ், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் மும்பையிலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை எற்படுத்தியுள்ளதோடு ரசிகர்களையும் ஈர்த்துள்ளார்.

‘கொலவெறி’ பாடல் மூலம் வட இந்தியர்களுக்கு அறிமுகமாகி அதிகம் பேசப்பட்ட தனுஷ்  ‘ராஞ்சனா’, ‘சமிதாப்’, ஆகிய இரண்டு இந்திப் படங்களிலும் நடித்தார். இப்பொது சக வட இந்திய நடிகராகவே அங்குள்ள ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.  விரைவில் வெளிவரவுள்ள விஐபி 2 படத்தில் பிரபல இந்தி நடிகை கஜோல் நடிப்பது அனைவரும் தெரிந்த ஒன்று, இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் வெளிவருகிறது.

ஏற்கனவே இவர் நடித்த ‘கொடி’ திரைப்படம் ‘ரவுடி ஹீரோ – 2’ என்ற பெயரில் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு மும்பையில் வெற்றிநடைப்போடுகிறது. இதனைத் தொடர்ந்து விஐபி 2 படமும் பெரிதும் ரசிகர்களைக் கவரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் தனுஷ்.