தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் டூயட்

நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளார் என பிஸியாக இருப்பவர் தனுஷ்.  இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தமிழில்  கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2ஆகிய படங்களில் நடித்து வருகிறர்.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. படத்திற்கு டூயட் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்தியில் ரன்பீர்கபூர்,பிரியங்கா சோப்ரா மற்றும் இலியானா நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த பர்பி படத்தின் ரீமேக் இது. காதல், நகைச்சுவையை மையமாக கொண்ட இந்தபடத்தின் ரீமேக்கை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இயக்குனர் மற்றும்  நடிக- நடிகைகள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.