சின்னத்திரை நட்சத்திரங்களை வெள்ளித்திரையில் மின்ன வைப்பதில் வல்லவா் நடிகா் தனுஷ். முதலில் சிவகார்த்திகேயனை வெள்ளத்திரைக்கு கொண்டு வந்து அழகு பார்தார். அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவா் தீனா. ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவரை தன்னுடைய ப.பாண்டி படத்தில் நடிக்க வைத்தார். தற்போது இவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளராம் தனுஷ் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. தனுஷ் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் தீனாவை நாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலைியில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அறந்தாங்கி நிஷா தனுசுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தனுசின் ரசிகா்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷோ் செய்துள்ளனா். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகா்கள் என்ன தனுஷ் சார் முதலில் தீனா, இப்போது அறந்தாங்கி நிஷாவா என்று கேட்டுள்ளனா்.