சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானதில் இருந்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த எதிர்பார்ப்பை வைத்து தனுஷ் இந்த படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினி-ரஞ்சித்தின் முந்தைய படமான ‘கபாலி’ தெலுங்கு மாநிலங்களில் ரூ.30 கோடிக்கு விலை போனது. எனவே இந்த படத்தையும் அதே தொகைக்கு விற்பனை செய்ய தனுஷ் திட்டமிட்டார்.

ஆனால் ‘கபாலி’ தெலுங்கு மாநிலங்களில் எதிர்பார்த்த வசூலை பெறாததால், ‘காலா’ படத்தை தனுஷ் சொல்லும் விலைக்கு வாங்க முன்னணி தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை

எனவே தெலுங்கு மாநிலங்களில் தனுஷ் இந்த படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.