போலி கையெழுத்து போட்டாரா தனுஷ் ? – முற்றும் விவகாரம்

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், மீனா தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராக சில நாட்களுக்கு முன்பு தனுஷ் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரின் அங்க அடையாளங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. அதில் தனுஷ் தனது உடலில் இருந்த சில அங்க அடையாளங்களை மாற்றியிருப்பதாக மருத்துவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள தனுஷின் கையெழுத்து போலியானது எனவும், அந்த மனுவின் நகலை தங்களுக்கு தர வேண்டும் என மேலூர் தம்பதியினரின் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் டைட்டஸ் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தனுஷ் தரப்பிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.