சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்த இளம் நடிகரான சிவககார்த்திகேயன், தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து,மிக குறிகிய காலத்திலேயே குழந்தைகள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் ஈர்ப்பை உண்டாக்கினார். பெரிய வாய்ப்புகளும் இவரை நாடிவந்தது.

இதையும் படிங்க பாஸ்-  வடசென்னை ரிலீஸ் எப்போது? தனுஷின் ரகசிய திட்டம்

துவக்கத்தில்  நடிகர் தனுஷுடன் “3” படத்தில் அவருடைய நண்பராக நடித்தார். இருவரும் நிஜத்திலும் நெருங்கிய நண்பர்கள்ஆனார்கள். தொடர்ந்து, தனுஷின் நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் மூலம் சிவகாரத்திக்கேயன்எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இக்காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷின் நட்பும் வளர்ந்து இவர்கள் நெருங்கிய நண்பர்களாக வளம் வந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டு: சுசித்ரா சர்ச்சை பதிவு

சமீபத்தில் இருவருக்குமான நட்பு முறிந்துவிட்டதாக பல ஊடகங்களில் பேசப்பட்டது, இந்தப் பிளவிற்குக் காரணம்தொழில்ரீதியானபிரச்சனையாஅல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என பலரும் ஆராய்ந்தனர்.

இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் அனுப்பியுள்ளார் சிவா. இதனால் பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.