ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ் மகன் லிங்காவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா – விஷாகன் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று கோலகலமாக நடைபெற்றது. சௌந்தர்யாவிற்கும், நடிகர் விஷாகனுக்கும் நடைபெற்ற திருமணத்திற்கு பலரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். தன்னுடைய மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கமல்ஹாசன் வரை பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

அந்த விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியின் மகன் லிங்கா வெள்ளை நிற பட்டு வேட்டி மற்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்து கலந்து கொண்டார். மேலும், தலைக்கு செந்நிற டை அணிந்து மாஸ் லுக்கில் இருந்தார். அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

லிங்காவின் புகைப்படத்தை பார்த்த பலரும், தாத்தா ரஜினியை போல் பேரனும் ஸ்டைலாக இருக்கிறார் என்றும், எதிர்காலத்தில் அவரும் நடிகர் ஆனால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை எனவும் கருத்து கூறி வருகின்றனர்.