கஜோலை கொலை செய்யவும் தயங்க மாட்டேன். தனுஷ்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினி இயக்கியுள்ள ‘விஐபி 2’ படத்தின் பிரஸ்மீட் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய தனுஷ், ‘கஜோல் மேடம் 20 வருடங்களுக்கு பின்னர் எங்கள் படத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமையே. ‘மின்சார கனவு’ படம் வந்தபோது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றேன். அவரை திரையில் பார்த்து அதிசயித்துள்ளேன். இன்று அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியே

‘விஐபி 2’ ஆம் பாகத்தை அடுத்து ‘விஐபி 3’ ஆம் பாகம் மற்றும் ‘விஐபி 4’ ஆம் பாகம் உருவாக்கவிருப்பது உண்மைதன. ‘விஐபி 3′ ஆம் பாகத்தில் கண்டிப்பாக கஜோலும் நடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் 3ஆம் பாகத்தில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்துதான் அவரது கேரக்டரை கொலை செய்வதா? அல்லது 4ஆம் பாகம் வரைக்கும் கொண்டு செல்வதா? என்பதை இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தனுஷ் கூறினார்.

மூன்றாம் பாகத்தின் கதை அமைவதை பொறுத்து தான் இயக்குனர் உள்பட மற்ற டெக்னீஷியன்கள் உறுதி செய்யப்படுவார்கள். ஒருவேளை அந்த கதைக்களத்திற்கு தேவைப்பட்டால் மீண்டும் அனிருத்தை அந்த படத்திற்காக அழைப்பேன்’ என்று கூறினார்.