அந்த செயல் நியாயமற்றது – தனுஷ் வருத்தம்

தன்னை அறியாமல் கோபப்பட்டு விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் தனுஷ்.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, ஒரு பெண் நிருபர் சுச்சி லீக்ஸ் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும் கேள்வி கேட்க, ‘ஸ்டுப்பிட் இண்டர்வியூ’ என்று சொல்லி மைக்கை கழற்றிவிட்டு பாதியிலேயே எழுந்து போய்விட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்துவந்து பேட்டியைத் தொடர்ந்தார். அந்த நிருபரும் அதற்குப் பின் அதைப்பற்றி கேட்கவில்லை.

இந்த சம்பவத்தை நினைத்து வருந்துவதாக, டெல்லியில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் தனுஷ். “பொதுவாகவே நான் அமைதியானவன். எப்போதும் அப்படி நடந்துகொள்ள மாட்டேன். என்னை அறியாமல் அன்று அப்படி நடந்து கொண்டேன். அந்த செயல் நியாயமற்றது” என வருத்தம் தெரிவித்துள்ளார்