விஐபி2 ரிசல்ட்டை பார்த்த பின்னும் விஐபி3 எடுப்பாரா தனுஷ்?

தனுஷ் மற்றும் அமலா பால் இனைந்து நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது . இன்ஜினியரிங் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  துல்லியமாக எடுத்துரைதிருந்தார் நடிகர் தனுஷ்.  பாடல்கள், காமெடி , சண்டை காட்சிகள் என ஒன்று  விடாமல் எல்லாமே ஹிட்.  சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரையும் கவர்ந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. VIP 2 படத்தின் கதை , திரைக்கதை வசனத்திற்கு சொந்தக்காரர் நடிகர் தனுஷ்,  படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள். கலைப்புலி S தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சுமார் 20 வருடங்கள் கழித்து நடிகை கஜோல் அவர்கள் வில்லியாக நடித்துள்ளார்.  சீயான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதாவது இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழில் வெளியாகும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு. ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆகஸ்ட் 18அம் தேதி வெளியாகிறது.

Vip 2 உலகெங்கும் பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. அதுவும் மலேசியாவில் 550 திரைகளில் வெளியாகிறது. இது ரஜினிகாந்த் அவர்களின் கபாலியை வெளியிட்ட திரைகளை விட அதிக எண்ணிக்கை ஆகும்.

இதையடுத்து நடிகர் தனுஷ் VIP 3 இயக்க உள்ளதாகவும். மூன்றாம் பாகத்திலும் நடிகை கஜோல் நிச்சயமாக இருப்பார் என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று வெளியான விஐபி2 படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த வகையில் இல்லை என்றே சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகின்றன். இதையடுத்து  விஐபி3 படத்தை தனுஷ் எடுப்பாரா என்ற கேள்விகுறி அனைவரின் மனதிலும் எழாமல் இல்லை