Dhanush, Samantha’s Majili : தெலுங்கில் இயக்குநர் சிவநிர்வனா இயக்கிய ‘மஜிலி’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இதில் ஹீரோவாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல நடிகர் தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்-தனுஷ்!

அதுமட்டுமின்றி, இதன் ரீமேக் வெர்ஷனில் தனுஷே ஹீரோவாக நடிக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.