காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும்,ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி வளர்த்து விட்டவர் தனுஷ். ஒரு கட்டத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏறப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க போராட்டத்தில் இருவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இருவரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை பார்க்கையில் நிச்சயம் எந்த பகையும் இருப்பதாக தெரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் அப்படினா இவ்வளவு நாள் வந்த செய்திகள் எல்லாம் பொய்யா என நினைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.