தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘பொல்லாதவன்’ ‘ஆடுகளம்’ படத்தினைத் தொடரந்து 3வது முறையாக உருவாகியுள்ள
திரைப்படம்தான் வடசென்னை’. இப்படத்தில்
ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர்,
டேனியல், பாலாஜி, கருணாஸ், கிஷோர், ராதாரவி, சீனு
மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்துள்ள
இத்திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்
வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன்
இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ்
ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்கள்
சந்திப்பு நடைபெற்றது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா
ராஜேஷ், வெற்றிமாறன் மற்றும் ஆண்ட்ரியா
ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய தனுஷ், ‘வடசென்னை’ திரைப்படத்திற்கு
தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதை
மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். இப்படத்தை
பார்வையாளர்கள் முன்னிலையில் நேர்மையாக
படைக்க விரும்புகிறோம் என கூறினார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், என்னுடைய
திரை வாழ்க்கையில் ‘வடசென்னை’ திரைப்படம்
மைக்கல்லாக அமையும். இப்படத்தின் இரண்டாம்
பாகம் விரைவில் ஆரம்பமாகும். மீண்டும்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறேன். இப்படத்தின்
படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இப்படம்
‘வடசென்னை 2’ கிடையாது. என தெரிவித்தார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள
இயக்குநர் அமீர் பேசும் போது, ‘வடசென்னை’
படத்தினைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன்
இருவரும் பல படங்களில் இணைந்து
பணியாற்றயுள்ளனர் என தெரிவித்தார்.

இதில் நடிகை ஐஸ்வர்யா பேசியபோது, இப்படத்தில்
துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்திருக்கிறேன்.
இதுநாள் வரை எந்தவொரு கதாநாயகியும் தமிழ்
சினிமாவில் நடிக்காத கதாபாத்திரம் இது என்று
கூறினார்.

‘வடசென்னை’ படத்தில் வெளியான டீசர் மற்றும்
பாடல்கள் ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பைப்
பெற்றது. இதையடுத்து வருகிற அக்டோபர் 17-ஆம்
தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாக
உள்ளது. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த
எதிர்பார்ப்பபைக் கொண்டுள்ளது.