ரஜினி நடித்த காலா, பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நானா படேகர்.

அதே போல் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளையில் ஒரு கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா.

இவர் நானா படேகர் தன்னிடம் பாலியல் தொல்லை செய்ததாக தொடர் பேட்டி கொடுத்து அதிர வைத்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய தனுஸ்ரீ, ‘நானா படேகர் குறித்து திரைப்படத் துறையில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அவர் பெண்கள் குறித்து எப்படிப்பட்ட எண்ணத்தை வைத்திருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அவரின் பின்புலம் குறித்தும் தெரியும்…

இதையும் படிங்க பாஸ்-  வெற்றிப்படம் ஆனால் லாபமில்லை: சுந்தர் சி புலம்பியது ஏன்? cine reporters

அவர் எப்படி நடிகைகளை தாக்கியுள்ளார், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார், பெண்களுடன் எவ்வளவு தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார் போன்ற விஷயங்கள் பலருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அது எதுவும் ஊடகங்களில் வருவதில்லை’ என்று விவரித்தார்.

மேலும் ரஜினி, கமல், அக்சயகுமார் போன்ற சிறந்த நடிகர்கள் நானா படேகருடன் இணைந்து நடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.