உலகக்கோப்பை இறுதிப் போட்டியையே மாற்றிய ஓவர்த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான் என களநடுவர் தர்மசேனா தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றியின் காரணமாக சொல்லப்படும் காரணங்களில் ஒன்று பென்ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்ற ஓவர்த்ரோ. இந்த ஓவர்த்ரோ ரன்களால்தான் இங்கிலாந்து சூப்பர் ஓவர் வரை சென்றது. இல்லையென்றால் தோற்றிருக்கும் எனவும் விதிகளின் படி அதற்கு 6 ரன்கள் கொடுத்திருக்கக் கூடாது 5 ரன்களே கொடுத்திருக்க வேண்டும் எனவும் ஸ்டோக்ஸை நான் ஸ்ட்ரைக்கர் இடத்தில்தான் நிறுத்தியிருக்க வேண்டும் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து 6 ரன்கள் அளித்தது பற்றி கள நடுவர் தர்மசேனா விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கிய எனது முடிவு தவறானதுதான் என்பதை நான் ரீப்ளேயில் பார்த்து தெரிந்துகொண்டேன். ஆனால், அந்த தவறுக்காக நான் வருத்தப்படமாட்டேன். ஆனால், மைதானத்தில் இருக்கும்போது என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது.  ஏனென்றால், நான் அந்த நேரத்தில் அளித்த முடிவுக்கு  ஐசிசி என்னை அழைத்துப் பாராட்டியது. ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை ஓடி முடித்துவிட்டார் என்று நினைத்துதான் நானும் லெக் அம்பயரும் ஆலோசித்தும் 6 ரன்கள் வழங்கினோம்.’ எனக் கூறியுள்ளார்.