சந்தானம் காமெடியில் தனி முத்திரையை பதித்து வந்தார். திடீரென அவருக்கும் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தது. அதனால் அவா் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் நாயகனாக நடித்தார். பின் வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமேல் இப்படிதான்,தில்லுக்கு திட்டு, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது சா்வர் சுந்தரம், ஒடி ஒடி உழைக்கனும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் சுமராக தான் போனது. ஆனால் தயாரித்து நடித்து தில்லுக்கு திட்டு படமானது மாஸ் ஹிட் கொடுத்தது. தில்லுக்கு துட்டு படமானது காமெடி த்ரில்லா் கதையாக முதல்பாகம் வெளியாகி ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் தொடா்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் ஹீரோவாக சந்தானம், கதாநாயகியாக தீப்தி ஷெட்டி நடிக்க இருக்கின்றனா். இந்த படப்பூஜையில் இயக்குநா் ராம்பாலா, ஒளிப்பதிவாளா் தீபக்குமார்பதி, இசையமைப்பாளர் ஷபிர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனா்.