சியான் விக்ரம் படத்தில் விஜய் டிவி டிடி

DD

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் புதியதாக விஜய் டிவி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினி இணைந்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டர் ஒன்றுக்கு கவுதம்மேனன் பல நடிகைகளை பரிசீலித்து வந்ததாகவும், சமீபத்தில் அவர் பார்த்த பவர்பாண்டி படத்தில் டிடியின் நடிப்பு அருமையாக இருந்ததால், அந்த கேரக்டருக்கு அவரே சரியாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை அணுகியதாகவும் விக்ரம், கவுதம் மேனன் பட வாய்ப்பு என்றதும் உடனே டிடி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு பின்னர் டிடிக்கு கோலிவுட்டில் அதிக படங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அந்த அளவுக்கு அவருக்கு இந்த படத்தில் பவர்புல் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.