கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தல என்றால் அஜித்தான் என்று சின்னக்குழந்தை கூட சொல்லிவிடும். ஆனால் தற்போது தல என்றவுடன் அனைவருக்கும் தோனி நினைவுதான் வருகின்றது. அந்த அளவுக்கு தோனிக்கு தல என்ற பெயர் பக்காவாக பொருந்திவிட்டது

இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தல தளபதி என்ற பெயரில் ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளார். இந்த போஸ்டரில் தோனியும் விஜய்யும் ஒரே ஸ்டைலில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டருக்கு விஜய் ரசிகர்களும், தோனி ரசிகர்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருவதால் இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.