இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓவியம் வரைவதில் இனி அதிக நேரம் செலவிடப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய அணிகளுக்கு இரண்டு உலகக்கோப்பைகளை வாங்கிக் கொடுத்த தோனி தனது கடைசி உலகக்கோப்பைக்காக தயார் ஆகி வருகிறார். இதுதான் அவர் கலந்துகொள்ளும் சர்வதேச தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அவர் ஓய்வுக்குப் பின்னர் அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னர் தான் என்னவாக ஆகப்போகிறேன் என்பது பற்றி  வீடியோ ஒன்றின் மூலம் தோனி சொல்லியுள்ளார். அதில் ‘சிறு வயதில் நான் ஓவியராக வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டேன். இனி ஓவியங்கள் வரைவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.

இதனால் தோனி மீண்டும் ஓவியத்துறைக்கு செல்ல இருப்பதாகவும் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன.