இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்திற்கு படத்திற்கு பின் நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இந்தியன்2 படத்திற்கு பின் நடிகர் விக்ரமின் மகனும், பாலா இயக்கத்தில் ‘வர்மா’படத்தில் நடித்தவருமான துருவை வைத்து ஒரு ஜாலியான படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.