நடிகர் விக்ரமின் மகன் துருவ் தான் நடித்த முதல் படத்தின் சம்பளத்தை முழுவதுமாக கேரள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் தனது அயராத நடிப்பால் திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துள்ளார். நடிப்பைத் தாண்டி விக்ரம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு 35 லட்சம் ரூபாய் வழங்கினார்.

இதையும் படிங்க பாஸ்-  த்ரிஷாவின் திடீர் முடிவு ஏன்? சாமி 2' படக்குழுவினர் அதிர்ச்சி

இந்நிலையில் தந்தைக்கு சளைத்தவன் நான் அல்ல என நிரூபித்துள்ளார் விக்ரமின் மகன் துருவ். துருவ் தான் நடித்துள்ள வர்மா படத்தில் பெற்ற முழு சம்பளத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து தனது நிவாரணத் தொகையை துருவ் வழங்கினார். துருவ்விற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  கை கால் நல்லாத்தானே இருக்கு... இப்படி ஆகிப்போச்சே நடிகையின் நிலைமை....