நடிகர் விக்ரம் மகன் துருவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விக்ரம் எப்போதும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அதனால் கட்டுக்கோப்பான உடலை எப்போதும் பராமரித்து வருகிறார். ‘ஐ’ படமே அதற்கு மாபெரும் சாட்சி. விரைவில் வெளியாகவுள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்திற்காகவும் விக்ரம் உடலை ஏற்றியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  துருவ் விக்ரமிற்கு அப்பாவான கௌதம் மேனன் !

இந்நிலையில், அவரது மகன் துருவ் விக்ரமும் தற்போது உடலை ஏற்றி வருகிறார். பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘வர்மா’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தனது சமூகவலைத்தள பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக வலம் வருகிறது. அடுத்து நடிக்கப்போகும் படத்திற்காக அவர் உடலை ஏற்றி வருகிறாரா என்பது தெரியவில்லை.