நேற்று இளையதளபதி விஜய்யை இயக்குனர் பார்த்திபன் நேரில் சந்தித்து தனது மகள் கீர்த்தனாவின் திருமண அழைப்பிதழை கொடுத்தார் என்பதும், இந்த சந்திப்பின்போது விஜய்யின் தாயார் ஷோபா இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய், ஷோபா, பார்த்திபன் உள்ள இந்த புகைப்படத்தில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஒரு பெயிண்டிங் உள்ளது. இந்த பெயிண்டிங்கில் ‘என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்… பல கோடி ரசிகைகளில் ஒருத்தி’ என்ற வாசகமும் உள்ளது. இந்த பெயிண்டிங்கை தனது கையாலே வரைந்து விஜய்யின் 43வது பிறந்த நாளின்போது பரிசளித்தவர் நடிகை கீர்த்திசுரேஷ் என்பது தான் இந்த புகைப்படத்தின் ரகசியம்