கண்டதைப் படிப்பவன் பண்டிதனாவான் என சொல்லி கேள்விபட்டிருக்கிறீர்களா? நம் பள்ளி நாட்களில், பிடித்தும் பிடிக்காமலும், புரிந்தும் புரியாமலும், நம் ஆசிரியர் பெற்றோருக்கு பயந்தும் புத்தகம் படித்திருப்போம்.

ஆனால் பள்ளி நாட்களுக்குப் பிறகு, அன்றாட வாழ்க்கை சிக்கல்களில் மூழ்கி, படிக்கும் பழக்கத்தை வெகுவாகவே மறந்து போகிறோம். நொடிக்கொரு தொழில்நுட்பம் உருவாகி வரும் இந்த காலகட்டத்தில், கையில் புத்தகம் ஏந்தி அதற்கென நேரம் செலவிட்டு படிப்பது என்பது சிலருக்கு தேவையற்ற செயலாகத் தோன்றும், “இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லைப்பா” என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கு ஒரு ரகசியம்….

நீங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய உலகின் மிகச் சிறந்த வல்லுநர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் தன் முதல் காதல் புத்தகம் தான்! உலகின் முதல் 5 பெரும் பணக்காரர்களின் ஒருவரான ‘பில் கேட்ஸ்’ ஒரு புத்தக விரும்பி, இவர் வருடத்தில் கிட்டதட்ட 50 புத்தகங்களைப் படித்து முடிப்பதை இலக்காக கொண்டுள்ளார் (இன்றைக்கும்!!) என்றால் நம்புவீர்களா? அதாவது சுமார் ஒரு வாரத்திற்கு ஒரு புத்தகம்.

வாழ்க்கையில் சாதித்துள்ள யாரை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் வாழ்க்கையில் புத்தகம் படிப்பது என்பது ஒரு முக்கிய அங்கமாக இருப்பதைப் பார்ப்பீர்கள். புத்தகம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்! என்ன? இனி படிக்கத் தொடங்கலாமா?