தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் அடுத்த இரு படங்களில் நாயகி சான்ஸ் தருவதாக கூறிய இயக்குனர் மீது இளம் பெண் போலீஸில் புகார் அளித்தார்.

திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை இன்னும் குறைந்தபாடில்லை. அந்த காலங்களில் நடிகைகள் வெளியே சொல்ல அச்சப்படனர். ஆனால் தற்போது பெண்கள் அதனை பகிரங்கமாக கூறிவருகின்றனர்.

இதோ இன்னொரு சம்பவம்

இயக்குனர் அப்பா பவார் தனது அடுத்த படத்திற்காக புதுமுக நடிகையை தேர்வு செய்வதற்காக புனேவில் கடந்த 4ம் தேதி ஆடிஷன் நடத்தினார். அதில் தேர்வு செய்யப்பட்ட ஒரு பெண்ணை ஆகஸ்ட் 6ம் தேதி தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்ற அந்த பெண்ணிடம் இரண்டாவது ஹீரோயினாக உன்னை தேர்வு செய்துள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அப்பா பவார் அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அடுத்த இரண்டு படங்களில் உன்னை ஹீரோயினாக்குகிறேன். ஆனால் அதற்கு நீ என்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து கிளம்பி நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

இதையடுத்து  அப்பா பவார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்