இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தில் உள்ளது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதிய ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் நேற்று முன்தினம் நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் சதீஸ்கரில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உயிரி எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிக்க வலியுறுத்தினார்.

இதையும் படிங்க பாஸ்-  தேர்தல் முடிந்த அடுத்த நாளே விலை உயர்வு – கலக்கத்தில் மக்கள் !

உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி முதன்முதலாக நாம் விமானத்தை இயக்கியுள்ளோம். அதே போல பஸ், ஆட்டோ, கார், போன்றவற்றுக்கு எத்தனால், உயிரி எரிபொருள் கட்டாயம் ஆக்கப்படும். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  15 நாடுகளில் மோடி அரசு ரூ.34-க்கு பெட்ரோல் விற்கிறது: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு!

மேலும் பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இதனால் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்தியமானால் இந்தியாவில் டீசல் விலை ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கும், பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கும் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் நிதின் கட்கரி.