டி.ஐ.ஜி ரூபா வேடத்தில் நடிகை நயன்தாரா?

11:10 காலை

சிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா.

எப்போதும், எங்கேயும் நேர்மையாக செயல்படும் இவரின் கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது. நேர்மையாக இருந்ததால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

இப்படத்தை வனயுத்தம், குப்பி ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது “ டிஐஜி ரூபாவின் அலுவலகம் சென்று அவரிடம் நேரிடையாகவே இதுபற்றி பேசினேன். அப்போது அவர் பல தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதோடு, அவரின் கதையை சினிமாவாக எடுக்க சம்மதமும் தெரிவித்தார்.

இந்தப்படம் சிறை விதிமீறல், முறைகேடுகள் பற்றியது என்றாலும், ரூபா இதுவரை பணியாற்றிய மற்ற வழக்குகளின் விபரங்களும் இப்படத்தில் இடம்பெறும். இப்படத்தில் நடிக்க நடிக்க நடிகை நயன்தாரா அல்லது அனுஷ்காவை தொடர்பு கொண்டு பேச உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com