1972ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் வசந்த மாளிகை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் தயாரிப்பில் வந்த இப்படம் குடியின் தீமையை விளக்கியதோடு காதல் காவியமாகவும் விளங்கியது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் ஹிட் ஆகின. சிவாஜி ரசிகர்களுக்காக இப்படம் மீண்டும் தூசு தட்டப்பட்டு டிஜிட்டலில் கலர் கரெக்சன் பார்த்து புத்தம்புது டிஜிட்டல் படமாக மாற்றியுள்ளனர்.

இயக்குனர் விசி குகநாதன் மேற்பார்வையில் செய்யப்பட்டு வரும் தொழில் நுட்ப வேலைகள் முடிந்தவுடன் படம் ரிலீசுக்கு வந்து விடும்