கடந்த சில தினங்களாக மலையாள நடிகர் திலீப்புடன்  நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனை கோர்த்துவிட்டு செய்திகள் உலா வருகின்றன.  இந்த செய்தி என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு திலீப்புடன் கொல்கத்தா நியூஸ் என்ற படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவரை நீக்கினார்கள். அதற்கு திலீப் தலையீடுதான் காரணமென்று லட்சுமி கூறியதாக செய்திகள் வந்தன. இந்த செய்திகளை தொடர்பு படுத்தி தற்போது தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,  கொல்கத்தா நியூஸ் படத்திலிருந்து நீக்கியதற்கு திலீப் காரணம் இல்லை. நான் ராசியில்லாத நடிகை எனக் கூறி அப்படத்திலிருந்து நீக்கினார்கள். இப்போது எனது ராசி எப்படி என்று அனைவருக்குமே தெரியும். மேலும் படத்திலிருது நீக்கியது தொடர்பாக திலீப் என்னுடன் பேசினார். இப்போது தேவையில்லாமல் நான் சொல்லாததை சொன்னதாக கூறுவது தவறு. இந்த அடிப்படை அறிவு கூடவா எனக்கு இருக்காது என்று கூறினார்.