மஞ்சு வாரியருக்கு முன்னரே திலீப்புக்கு இன்னொரு மனைவி: அதிர்ச்சி தகவல்

06:38 மணி

நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

கேரள நடிகை சில மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு, காரிலேயே வைத்து பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார். இந்த வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸாருக்கு, அதிர்ச்சித் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மஞ்சு வாரியருக்கு முன்னரே திலீப்புக்கு இன்னொரு மனைவி இருந்த விஷயம்தான் அது.

கோபாலகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட திலீப்புக்கு அதற்கு முன்பே உறவுக்காரப் பெண் ஒருவருடன் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு, மஞ்சு வாரியருடன் காதல் ஏற்பட்டது. இது முதல் மனைவிக்குத் தெரியவர, அவர் திலீப்பிடம் இருந்து விலகிவிட்டார்.

அவரை விவாகரத்து கூட செய்யாமல், மஞ்சு வாரியரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு ஏற்பட, மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்றார். தற்போது திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆக, மொத்தம் மூன்று திருமணங்கள் செய்துள்ளார் திலீப். திலீப்பின் முதல் மனைவி, தற்போது வளைகுடா நாட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 18 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com