சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க நேற்று தினகரன், இளவரசி மகன் விவேக் , விவேக் மனைவி கீர்த்தனா, இளவரசியின் மருமகன் ராஜராஜன் ஆகியோர் வந்திருந்தனர். இந்த சந்திப்பின் போது அரசியல் எதுவும் பேசவில்லை எனவும், குடும்ப பஞ்சாயத்துதான் நடந்தது எனவும் தகவல் வருகிறது.

இளவரசியின் மகன் விவேக் ஜெயா டிவிக்கு வந்து சென்றாலும், அதன் தலைமை நிர்வாக பொறுப்பை தினகரனின் மனைவி அனுராதா தான் கவனித்து வருகிறாராம். இந்நிலையில் அனுராதாவுக்கு தெரியாமல் விவேக் முக்கியமான ஒருவரை செய்தி பிரிவுக்கு பணியமர்த்தியுள்ளார். இதனை அறிந்த அனுராதா அந்த நபரை வேலையிலிருந்து நீக்க அழுத்தம் கொடுக்க விவகாரம் சசிகலாவிடம் பஞ்சாயத்துக்கு சென்றிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  18 எம்எல்ஏக்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: சபாநாயகர் உத்தரவு செல்லும், செல்லாது!

சிறையில் உள்ள இளவரசியின் மூலமாக விவேக் இந்த விவகாரத்தை சசிகலாவிடம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே இவர்கள் அனைவரும் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சந்திப்பின் போது சசிகலா தினகரனிடம் சற்று கோபமாகவே பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  தினகரன் கட்சியில் இருந்து திடீரென வெளியேறிய நாஞ்சில் சம்பத்

அனுராதாவை ஆபிஸுக்கு வர அனுமதித்ததால டீவியை மொத்தமா உங்கக்கிட்ட ஒப்படைக்கல. விவேக்குக்கு முடிவெடுக்க எல்லா அதிகாரமும் இருக்கு. அவரு வேலைக்கு எடுத்த ஆளை வேண்டாம்னு சொல்றது, அவரை அவமதிக்கிறது எல்லாம் இனி நடக்க கூடாது. விவேக்கின் மனைவி கீர்த்தனாவும் ஆபீஸுக்கு வரட்டும். அதுக்காக நான் அனுராதாவை வர வேண்டாம்னு சொல்லவில்லை. வரட்டும், இவங்க எல்லாருடனும் பேசி எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கட்டும் என கூறி பஞ்சாயத்தை சசிகலா சரி செய்து அனுப்பியதாக பேசப்படுகிறது.