டிடிவி தினகரன் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன், ஓட்டுக்கு பணம் பெறுவது பிச்சையெடுப்பதற்கு சமம் என்று அந்த தொகுதி மக்களையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என கமல் நினைக்கிறார் கமல். அவர் நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர் என நினைத்தேன்; ஆனால் வாழ்க்கையில் நடிக்கிறார். அவரது மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இதுவரை தான் கமல்ஹாசனை விமர்சனம் செய்தது இல்லை என்றும், கமல் தன்னை திருடன் என்றும், மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதால்தான் அவரை விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்