18 எம்எல்ஏக்களும் ராஜினாமா?: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம்!

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காலத்தை கடத்துவதற்காகத்தான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதாக வெளிப்படையாக பேசப்படுகிறது.

இந்நிலையில் எதிரணியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ள தினகரன் தனது வீட்டிற்கு சில எம்எல்ஏக்களை அழைத்து பேசியுள்ளார். காலத்தை கடத்தி இந்த ஆட்சியை நீட்டிக்கத்தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது எனவே நாம் ராஜினாமா செய்துவிட்டால் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தேர்தலில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும், 18 தொகுதியிலும் அதே வேட்பாளர்கள் போட்டியிடுங்கள், செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன், எடப்பாடி அணி டெப்பாசிட் கூட வாங்க விடக் கூடாது என தினகரன் கூறியதாக தலவல்கள் வருகின்றன.

அந்த 18 தொகுதியையும் திமுக பிடிச்சுட்டாங்கன்னா என்ன பண்றது என எம்எல்ஏக்கள் கேட்க, தேர்தல் என்று வந்தால் போட்டி இல்லாமல் இருக்காது, எல்லா தடைகளையும் தாண்டி ஆர்கே நகரில் நாம் ஜெயிக்கவில்லையா, ஒவ்வொரு தொகுதியையும் ஆர்கே நகராய் நினைப்போம் ஜெயிப்போம் என கூறியுள்ளார் தினகரன்.

மொத்தமாக எல்லாரும் ராஜினாமா செய்யாமல் முதலில் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு, அவர்களின் ரியாக்சன் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, பின்னர் ஒவ்வொருவராக ராஜினாமா செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர். இதற்கு தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவு தெரிவித்துள்ளார். முதல் ராஜினாமாவை தானே செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாமல் தான் ராஜினாமா செய்ததாகவும், இதன் மூலம் அனுதாபம் கிடைக்கும் எனவும், அதை வைத்து மீண்டும் போட்டியிட்டு ஜெயிக்க தன்னால் முடியும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தினகரனின் திட்டத்தின் படி வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமையில் ராஜினாமா கடிதம் பரபரப்பை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.