அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் இருவரையும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நேற்று நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு தூர்வாரும் பணி என்ற பெயரில் முறைகேடுகளை செய்வதாக குற்றம்சாட்டி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நேற்று கண்டனக் கூட்டத்தை நடத்தியது. அதில் அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார்.

இதையும் படிங்க பாஸ்-  திமுகவிற்கு செல்கிறேனா? - தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை தற்போதும் கம்பீரமாக உள்ளது. ஆனால், விவசாயியின் மகன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி முக்கொம்பு அணையின் மேலணை மதகுகள் உடைவதைக்கூட கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். மணல் கொள்ளையால்தான் முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன.

இதையும் படிங்க பாஸ்-  இரட்டை இலையும், 2ஜி வழக்கும் எடுபடாதது ஏன்?

தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்று ஆட்சியாளர்கள் தமிழகத்தைச் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்வதற்காகவே திட்டம் கொண்டு வந்து கொள்ளையடிக்கிறார்கள். தூர்வாரும் பணி எங்கும் நடக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தைத்தான் தூர்வாரி உள்ளனர் என கடுமையாக சாடினார் தினகரன்.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ரஜினி....

தொடர்ந்து பேசிய அவர், தினகரன் தியாகியா என்று பன்னீர்செல்வம் கேட்கிறார். நான் தியாகி அல்ல, ஆனால் நீங்கள் துரோகி என்பது தமிழகத்துக்கே தெரியும் என்றார் அதிரடியாக.