அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தலுக்கான பணிகளைத் தமிழகத்திலேயே முதல் கட்சியாக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ள அம்மா மக்கள் முனேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 11 மண்டலங்களாகப் பிரித்து அதற்குப் பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளார்.

அந்த அமமுக நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள் கூட்டம் தினகரன் தலைமையில் நேற்று சென்னை அசோக் நகர் நடேசன் சாலையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குறைந்தது 37 தொகுதிகளிலாவது வெற்றிபெறும் என தினகரன் கூறியுள்ளார்.