தற்போது தமிழகத்தில் அதிமுக அரசு நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்து வருகிறார். அவரது அமைச்சரவை சகாக்கள் அதிகமான ஊழல்களில் ஈடுபட்டு வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியில் தன்னிடம் இருப்பதாக கடந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தினகரன் கூறினார். இந்நிலையில் தற்போது அதே கருத்தை வேலூரில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்திலும் தெரிவித்துள்ளார் தினகரன்.

நேற்று வேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்றை நடைபெற்றது. பெருவாரியான மக்கள் திரண்டியிருந்த இந்த கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் பேசினார்.

அமைச்சர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன சொத்துகளைச் சேர்த்துள்ளனர் என்பது குறித்த பட்டியல் என்னிடம் உள்ளது. அவர்களுக்குக் கொடி பிடிக்கும் அதிகாரிகளே இதை எனக்குத் தருகின்றனர் என்றார் தினகரன். மேலும் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். ஆட்சியாளர்கள் மாமியார் வீட்டுக்குச் செல்ல போகிற காலம் நெருங்கிவிட்டது என்றார்.