விஜய் குறித்து இப்படியா கூறினார் முருகதாஸ்?

மெர்சல் படத்தை அடுத்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். துப்பாக்கி, கத்தி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தொடந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது. சன் பிச்சர்ஸ் இப்படத்தை தயாரிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் படம் குறித்து கூறுகையில், விஜய்யுடன் மூணு படம் இல்லை, முப்பது படம் வேண்டுமானாலும் பண்ணுவேன். அவர் கிட்ட அவ்ளோ திறமை இருக்கு. அவரோட அனைத்து திறமையும் மாறுபட்ட கதைகள் மூலம் விஜய் என்றால் யார் என்பதை ரசிகர்கள் முன்பு கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.