விஜய் குறித்து அட்லீ கூறிய கருத்து

விஜய் பிறந்த நாள் அன்று அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயாிடாத படத்தின் பா்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று செய்திகள் பரவின. விஜய் 61 என்று பெயாிடாத படத்தில் விஜய்க்கு மூன்றுவித கேரக்டா். இதில் இவருக்கு நித்யாமேனன், காஜல்அகா்வால், சமந்தா என மூன்று நாயகிள் நடிக்கின்றனா்.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனா் அவரது ரசிக பட்டாளம். இந்த சந்தோசத்துடன் டபுள் ட்ரிட்யாக விஜய் 61 படத்தின் பா்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இது விஜய் ரசிகா்களுக்கு செம கொண்டாட்டம் தாங்க!!.. இயக்குநா் அட்லீ சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் விஜய் குறித்து நெகிழ்ச்சியான கருத்தை கூறியுள்ளாா்.

அந்த விழாவில் பேசியதாவது, எனக்கு கூட பிறந்த அண்ணன் கிடையாது. ஆனால் தெறிக்கு பிறகு எனக்கு ஒரு அண்ணன் கிடைத்து விட்டாா் என்று கூறியுள்ளாா். அவரை வைத்து எப்படியாவது படம் பண்ணியாக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்த ஆள் என்றும் கூறியுள்ளாா். அட்லியும் விஜய் ரசிகா் தானாம்.