பார்த்திபனுக்கு சல்யூட் – 3 வருடம் கழித்து பாராட்டிய சேரன்

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய படத்தை தற்போது இயக்குனர் சேரன் பாராட்டியுள்ளார்.

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஒரு வித்தியாசமான கதையை, வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருந்தார் பார்த்திபன். இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்பு, கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற படத்தை பார்த்திபன் இயக்கி அது வெளியாகி, தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டது. இந்த படம் ரசிகர்களை கவர தவறியதால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், 3 வருடங்கள் கழித்து இயக்குனர் சேரன் பார்த்திபனின் இயக்கத்தை பாராட்டியுள்ளார்.

“கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் நேற்றுதான் பார்த்தேன். பார்த்திபன் சாரின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.. Salute to you ParthipanSir.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேரன் இயக்கிய முதல் படமான பாரதி கண்ணம்மா படத்தில் பார்த்திபன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.