பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ரங்கஸ்தலம். ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த இந்த படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்து வெற்றிப்படமாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இயக்குனர் சுகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் ராம்சரண்-சமந்தா சம்பந்தப்பட்ட முத்தக்காட்சியை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த காட்சி அதிக டேக்குகள் வாங்கி கொண்டிருந்ததால் இந்த காட்சியை சீக்கிரம் எடுத்த்தால் ரூ.10 லட்சம் பரிசு என தயாரிப்பாளர் கூறியதாகவும், இதனை புரிந்து கொண்ட இயக்குனர் சுகுமர், அந்த முத்தக்காட்சியை இருவரிடம் உணர்ச்சிமயமாக விளக்கி பத்தே வினாடியில் சமந்தா, ராம்சரணுக்கு கொடுக்கும் முத்தக்காட்சியை படமாக்கியதாகவும், இதனால் தனக்கு ரூ.10 லட்சம் பரிசு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.