இயக்குனர் ஹரி இயக்கதில் விக்ரம் நடித்து வெளியான திரைபடம் சாமீ. இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் த்ரிஷா. இந்த படத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருப்பார்.
இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் இப்போது வரை பேசப்படும் படமாகவும் இருந்து வருகிறது.

தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் பாகம்-2 தற்போது ஆரம்பாக உள்ளது.
இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை பற்றி த்ரிஷா ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

“என்னுடைய முதல் சூப்பர்ஸ்டார் ஹீரோ விக்ரம் மற்றும் ஹரி சார் மூன்றாவது முறையாக இணையும் படம், ஷிபி தமீன் தயாரிக்க, சிறந்த திறமைசாலி ஹாரிஸ்..நாங்கள் மீண்டும் இணைகிறோம்.
இதை ஒரு வட்டம் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும், எங்கு ஆரம்பித்தேனோ மீண்டும் அங்கேயே திரும்ப செல்கிறேன். ‘சாமி 2’ படத்தில் நானும் இணைந்துள்ளேன். டபுள் ஆக்ஷன், டபுள் காதல், த்ரிஷா 62, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

சாமி-2 படத்தில் த்ரிஷா கமிட்டாகி இருப்பதால் அவருடைய நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.