வேதாளம் படத்திற்கு பின் அதாவது 2 ஆண்டுகளுக்கு பின் அஜித் நடித்த விவேகம் கடந்த வியாழன் அன்று வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படத்தின் விமர்சனங்கள் எதிர்மறையாகவே வந்தன. சிலர் கடுமையான முறையில் விமர்சனங்கள் அளித்தனர். ஆனாலும் வசூலில் விவேகம் பிந்தங்கவில்லை என்ற செய்தியும் வருகின்றன.

இந்த நிலையில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் , ஒரு நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது,  சிலருக்கு பிடிக்கும் .அதே சமயம் சிலருக்கு அது பிடிக்காது என்றார்.மேலும் உண்மையான உழைப்பு தோற்றதாக சரித்திரம் இல்லைனு அஜித் சார் சொன்னாரு. அது இப்போ நிரூபணம் ஆகிட்டு வருது என சிவா கூறியுள்ளார்.